17 Oct 2018

நூறு வயசுக்காரன்


இரு செய்திகள்
இரு நாட்டு அதிபர்கள் விடுத்த
ஏவுகணை எச்சரிக்கை
தலைப்புச் செய்தியான பிறகு
கர்த்தரும் நபியும் சந்தித்துக் கொண்டது
பெட்டிச் செய்தியாகிறது
*****
நூறு வயசுக்காரன்
நினைத்த உடன்
வந்து விடுவான் பேராண்டி
நூறு வயசு என்பாள்
பொக்கை வாய் புன்னகை மலர அப்பத்தா.
அல்பாயுசில் போய்ச் சேர்ந்தவன்
பகடி செய்துவது போல
பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறான்
புகைப்படத்திலிருந்து
எங்கிருந்து பார்த்தாலும்
எந்நேரமும் அப்பத்தாவைப் பார்த்தபடி.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...