16 Oct 2018

முத்தத் தேடல்


முத்தத் தேடல்
கொடுக்காமல் போன முத்தத்திற்கு
நீ சொன்ன காரணம்
முத்தத்தை வாங்கி
எங்கே வைப்பாய்
வாங்கி வைப்பதற்கா முத்தம்
ரசித்து விட்டு திருப்பிக் கொடுத்து விடுவேன் என்றதற்கு
முதலில் திருப்பிக் கொடு என்று
ஓடிக் கொண்டிருக்கிறாய்
நீ கொடுக்காத உன் முத்தத்தை
எப்படித் திருப்பிக் கொடுப்பதென
உன்னைத் தொடர்ந்தபடி
முதல் முத்தம் யாரிடமிருந்து யாருக்கு என்பது
கால தேவன் கணக்கா
காதல் தேவன் கணக்கா என
குழம்பியபடி ஓடி வந்து கொண்டிருக்கிறேன்
கரைகளை முத்தமிட்டு ஆர்ப்பரிக்கும்
கடல் அலைகள் கைகொட்டிச் சிரிக்கின்றன
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...