19 Oct 2018

குருநாதா என்றால் சாணி


வாசகர்களை பழி வாங்குவது இப்படித்தான். சிறிது சிறிதாக எழுதிக் கொண்டே... ... ... பெரிது பெரிதாக எழுத ஆரம்பித்து விடுவது.
*****
வாசகிகள் இல்லாத எழுத்தாளர் என்பார்கள் என்னை. அப்படிச் சொல்வது தவறு. நானே நான்கு பெண்களின் பெயர்களில் அக்கெளண்ட் வைத்து என்னைப் பின்தொடர்வதை அறியாதவர்கள் அவர்கள்.
*****
ஆசிரியர்கள் மேலும் பாலியல் குற்றச்சாட்டு வருகிறது. பாடல் ஆசிரியர்கள் மேலும் பாலியல் குற்றச்சாட்டு வருகிறது. பாருங்கள் குருநாதா என்றால் சாணியை எடுத்து வீசி விடுகிறார்கள்.
*****
வாசகர்கள் என்னைக் கேள்வி கேட்பதை விரும்புகிறேன். எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க என்று பத்து பதினைந்து கேள்விகள் இருக்க வேண்டும். முக்கியமாக ஜி.கே. குறித்த கேள்விகளுக்கு அதிக ஆர்வமாக இருக்கிறேன். முக்கியமாக அந்தக் கேள்விகளுக்கு கூகுள் பதில் சொல்ல வேண்டும்.
*****
தாத்தா நல்ல தாத்தா
எதார்த்தம் அறிந்த தாத்தா
அனைத்தும் தெரிந்த தாத்தா
சிறுசிரமம் கூட தராத தாத்தா
இந்தக் கவிதையை நான் எழுதுவதற்கானப் பின்னணியை அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
கடைசி மூச்சை விடுவதற்கு முன் ஐநூறையும், ......... கார்டையும் எடுத்து தலைமாட்டில் வைத்தார் தாத்தா. செத்த பின் டெத் சர்டிபிகேட் வாங்க அதை்தான் கொடுக்க வேண்டும் என்று தெரியாதா அவருக்கு.
இப்போது மீண்டும் கவிதையைப் படியுங்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...