19 Oct 2018

நண்பரைப் போலிருந்தவர்


நண்பரைப் போலிருந்தவர்
பார்ப்பதற்கு நண்பர் போலிருந்தார்
பேசுவதற்கு மனசு வராமல் போய் விட்டது
என்ன நினைத்துக் கொள்வார் நண்பர்
மானசீகமாக மனசுக்குள் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட
மறுவாரம் நேருக்கு நேர்
நண்பரைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தும்
பார்க்கதது போலக் கடந்து விட்டேன்
தவறாக எதுவும் நினைத்துக் கொள்ள மாட்டார் நண்பர்
நண்பரைப் போலிருந்தவரை
மறுமுறை சந்திக்க நேர்ந்தால்
நிச்சயம் பேச வேண்டும்
*****

No comments:

Post a Comment