15 Oct 2018

நாய்க்கும் நமக்கும் சகஜம்

நாய்க்கும் நமக்கும் சகஜம்
உடைந்த கண்ணாடியிலிருந்து
சிதறும் பிம்பங்கள்
தெறித்து விழுகிறது
பொறுக்க ஆளில்லாமல்
கூட்டிப் பெருக்கிக் குப்பைத் தொட்டியில்
வீசலாகிறது
காயங்களைப் பொறுக்க முடியாமல்
சுமந்து செல்கிறான் அவன்
சிதறிய ரத்தத் துளிகளைக்
கழுவி விடும் மழை
இனிமேல் பெய்யக் கூடும்
வேடிக்கைப் பார்ப்பவர்கள்
அவரவர்க்கு விருப்பமானதை மனதுக்குள்
பொறுக்கிச் செல்லுங்கள்
நடுத்தெருவில் அடிபடுவது
நாய்க்கும் நம்மில் யாரோ ஒருவர்க்கும் சகஜம்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...