3 Oct 2018

புயல் காற்றில் கிடைக்கும் புதிய தீவு

புயல் காற்றில் கிடைக்கும் புதிய தீவு
சன்னல் உடைக்கும் காற்றுக்கு
கதவைத் திறவாதே
உடைத்து அதுவே உள் வரட்டும்
உன் அறையின் அழுத்தப் புழுதி பறக்கட்டும்
தனிமை ஒட்டடைகள் சிறகு கொள்ளட்டும்
ரகசிய நாற்றமுடை காற்று சுகந்தமாகட்டும்
அறைகள் எல்லாம் இப்படி இருந்தனவே
மண்ணாகிப் போயிருக்கின்றன
காற்றுக்கு இப்படி வசப்பட்டு
மறுபிறப்பு கொள்வது அபூர்வம்
உனக்கு வாய்த்தது உன் அதிர்ஷ்டம்
ஊடுருவிப் போகட்டும் காற்று
புயல் காற்றில் பறந்து போய் புதிய தீவில் விழு
கண்ணியன் ஆனாய் நீ
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...