12 Oct 2018

நேற்று பிரேக் அப் ஆகி விட்டார்


பிரிட்டிஷ்காரன் நம் மண்ணைச் சுரண்டினால், நம் நாட்டுக்காரன் நம் மணலைச் சுரண்டுகிறான். இந்த மண்ணின் வரலாறு என்பது சுரண்டலின் வரலாறு.
*****
புத்தகங்கள் உலகையே மாற்றும். பட், அதைப் படிக்க வேண்டுமே!
*****
மக்கள் டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடுவார்கள். நிர்வாகங்கள் அதை அமைக்கப் போராடும்.
*****
கனவில் தற்கொலை செய்து கொண்ட நண்பருக்காக அழுதிருக்கிறேன், அழுதிருக்கிறேன், அப்படி அழுதிருக்கிறேன். அது தெரியாமல் அவர் நேற்று பிரேக் அப் ஆகி விட்டார். நட்பைக் கூட காதலைப் போல / கற்பைப் போல எண்ணுவேன்.
*****
கூலிக்கு மாரடிக்க விருப்பமில்லை. எல்லாம் கான்ட்ராக்ட்தான்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...