13 Oct 2018

ஆபரேசன் எம்.எல்.

ஆபரேசன் எம்.எல்.
இருபது நாள் இருபது நாளாய்
மும்முறை இடைவெளி விட்டு
வீடு கட்டியது
மூத்தவள் கல்யாணம்
நடுப்பிள்ளை கல்யாணம்
இளையவன் கல்யாணம்
மூவர்க்கும் இருபத்தோரு நாள் வீதம்
வேலைக்குப் போகப் பிடிக்காமல்
அவ்வபோது இடையிடையே
அஞ்சாறு நாள் வீதம் பலமுறை
கோவா, கோவளம் போய்
குடித்துக் கும்மாளமிட்டு வர
மூன்று நாட்கள் என சிலமுறை
மாநாடு மாநிலக் கூட்டம் பொதுக்கூட்டம் என
ஏழு நாட்கள் எட்டு நாட்கள்
வரைமுறையற்று வாங்கிக் கொண்டது
எல்லாம் மருத்துவ விடுப்புதான்
மருத்துவத்துக்கென எடுக்கப்பட்டதில்லை
இந்த மருத்துவ விடுப்பு என
சிரித்துக் கொண்டாலும்
நெஞ்சு வலி வந்து சேர்வது
விடுப்பேதும் வழங்க வாய்ப்பில்லாத
ஓய்வுக் காலத்தில்
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...