2 Oct 2018

மதிப்பிற்குரியவர்களின் செயல்கள்


மதிப்பிற்குரியவர்களின் செயல்கள்
நீர்த்துறைகள் ஏதுமில்லை
தாவணி போட்ட பாவையர் பாவாடை ஒதுக்கி
காலால் எத்தச் சிரிக்கும் நீரைப் பார்த்து நாளாயிற்று
அதனாலென்ன
நீருற்றுகளும் நீச்சல் குளங்களும்
நிறையவே இருக்கின்ற நாட்டில்
லாரியில் போகும் தண்ணீருக்கு மவுசு
ஆற்றில் போகும் தண்ணீர்தான் பாவம்
எத்தனை முறைதான் சொல்வது
பாக்கெட்டில் அடைத்த நீரை
பவ்வியமாய் வாங்கிப் பருகுவார்
ஆற்று நீரில் சாக்கடையைக் கலந்து விடுவார்
படுபாவிகள்
காசு கொடுத்து வாங்கும் தண்ணீர்க்கு
மதிப்பு இருக்கிறதென்பார்
இயற்கை தரும் நீருக்கு என்ன மதிப்பு என்று கேள்
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...