14 Oct 2018

யோசிப்பதற்கு நேரமில்லாத விபத்து


யோசிப்பதற்கு நேரமில்லாத விபத்து
இட்டிலிக்குச் சட்டினிச் சாப்பிடாமல் வந்திருப்பான்
ஹேண்ட் பேக்கில் பெர்ப்யூம் மறந்திருப்பாள்
ஸ்கூல் பேக்கில் ஒரு நோட்டை விட்டிருப்பான்
ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் செப்பல் மாறியிருக்கும்
நான்கு சொட்டு பெட்ரோலில் கிளம்பியிருக்கும் ஸ்கூட்டி
கம்மியான காற்றழுத்தத்தில் போய்க் கொண்டிருக்கும் பல்சர்
பத்து நிமிடம் தாமதமாய் எடுத்திருப்பான் 21பி
ரா முச்சூடும் உறங்காமல் ஓட்டி வருவான் லாரிக்காரன்
ஒழுக விட்டு ஓட்டி வருவான் தண்ணீர் லாரிக்காரன்
பிதுங்கிய ஆட்டோவில் ஒரு முகம் மறைந்திருக்கும்
நடக்கும் முன் எல்லாவற்றயைும்
ஒருமுறை பரிசீலனை செய்து
யோசித்துப் பார்த்திருக்கலாம்
இந்தக் கோர விபத்து
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...