5 Sept 2018

ரகசியமாக சொல்ல வேண்டும்


நான் சொல்லாவிட்டாலும் யாரோ சொல்லி விடுகிறார்கள். ஆனாலும் நான் ரகசியமாக சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
*****
பெண்டாட்டி, பிள்ளைகளை விட பணத்தை நேசிப்பவர்கள் அதிகம். கேட்டால் பெண்டாட்டி, பிள்ளைகளுக்காகத்தான் பணம் சேர்ப்பதாக சொல்கிறார்கள்.
*****
பல்கலைக் கழக ஆய்வுகள் பயங்கரமானவை. பணத்தைக் கொடுத்தால் சுலபமாக முடிந்து விடுகின்றன.
*****
மிகவும் அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். அந்தாண்ட போனால் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள்.
*****
இரஜினிகாந்த் பத்து லட்சம் நிவாரணம் கொடுத்தாலும், பதினைந்து லட்சம் நிவாரணம் கொடுத்தாலும் அது விளம்பரமாகும். சாமன்யன் இருபது லட்சம் கொடுத்தாலும் அது விளம்பரம் ஆகாது. யாருக்கும் விளம்பரம் செய்ய வேண்டும் என்பதில் ரொம்பவே தெளிவாக இருக்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...