6 Sept 2018

மனநோயாளி மகானைப் புகழுங்கள்!

மனநோயாளி மகானைப் புகழுங்கள்!
அவன் மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்
அதிலிருந்து மீட்பதற்கான
அத்தனை சாத்தியங்களையும்
அத்தனை அழகாக நிராகரித்து விடுகிறான்
மனநலம் மோசமாவதை விடவும்
பணம் முக்கியம் அவனுக்கு
அவனுக்கு ஏதாவது செய்வதா?
எதுவும் செய்யாமல் விட்டு விடுவதா?
அவனைப் புரிந்து கொள்ளலாம்
அத்தோடு விட்டு விடுங்கள்
வழிநடத்தவோ, திருத்தவோ முடியாது
ஏனென்ற காரணங்கள் எப்படிச் சொல்ல முடியும்?
அவன் அதிகாரத்தில் இருக்கிறான்
அத்துடன் பணத்தோடும் இருக்கிறான்
மண்டியிட்டு அந்த மனநோயாளியை
மகானைப் போலப் புகழுங்கள்
மேலதிகமாக எதுவும் கேட்காதீர்கள்
அவனிடமிருந்து ஒரு காசு சொட்டா விட்டால்
எரியும் வயிற்றுக்கு கஞ்சி ஏது?
கடைசியில் பரிதாபப்பட்டுக் கொள்ளுங்கள்
துன்பப்பட்ட உங்களுக்காகவும்
துன்பப்படுத்திய அவனுக்காகவும்.
*****

No comments:

Post a Comment