10 Sept 2018

வழிமுறையாக வழிபடுபவர்கள்


பேசினால் நியாயம் கிடைக்கும் என்பதையோ, எழுதினால் நியாயம் கிடைக்கும் என்பதையோ நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அது தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்பதைப் போல. பேச்சிலும், எழுத்திலும் நியாயம் கிடைப்பது என்பது அதைப் பேசுகின்ற, எழுதுகின்ற ஆளைப் பொருத்தது. மற்றபடி நியாயத்துக்காக நாம் பேசித்தான், எழுதித்தான் ஆக வேண்டும். அது ஒரு சடங்கு. தவிர்க்க முடியாதது.
*****
ஓர் உண்மையைச் சொல்லிப் போராடுவதை விட, ஒரு பொய்யைச் சொல்லி வெளியேறுவது எளிதாக இருக்கிறது.
*****
சொல்ல வேண்டியதைச் சொல்லலாம். மற்றபடி சொல்வதற்கு எந்த மதிப்பும் இல்லை. அதற்காக சொல்லாமல் இருக்க முடியாது. அதை ஒரு வழிமுறையாக வழிபடுபவர்கள் நாம்.
*****
ஆர்வமற்றுப் போவதுதான் நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் மிகப் பெரிய தண்டனை.
*****
ரசுப் பேருந்து பொறுமையை வளர்க்கிறது. மிக மிக மெதுவாக ஓடி அது பொறுமையை வளர்க்கிறது. வளர்த்துக் கொண்டே இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...