10 Sept 2018

புனைவில் அடித்துக் கொள்ளும் மனிதர்கள்


புனைவில் அடித்துக் கொள்ளும் மனிதர்கள்
எது எங்கிருந்ததோ?
ஆதியில் அங்கு
செடிகள், கொடிகள், கற்கள்
இருந்திருக்கக் கூடும்
கல் கடவுளாக
செடிகள், கொடிகள் பிய்த்திருக்கப்பட்டிருக்கும்
அதே கல்லுக்கு
கடவுளின் பெயர் மாற்றப்பட்டிருக்கும்
கடவுளின் பெயரால் அடித்துக் கொள்ளும் அவர்கள்
வரலாற்றை நோண்டுவார்கள்
வரலாற்றைப் பிடுங்கும்
மாபெரும் வன்முறையில்
கடந்த காலத்தைத் தோண்டித் தோண்டி
உரு கொள்ளும் உருவமற்ற அரசியல்
புனைவில் மனிதர்கள் அடித்துக் கொள்வது
அப்பட்டமான உண்மை போலிருக்கும்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...