11 Sept 2018

நாய் வளர்ப்பவர்கள்

நாய் வளர்ப்பவர்கள்
என்றோ வரப் போகும் திருடனுக்காக
எங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்கிறது
வாக்கிங் சென்றால் ஓடி வரும்
பைக் என்றால் ஏறிக் கொள்ளும்
நான்கு நாட்கள் வெளியூர் சென்றால்
எப்படியோ வெளியில் சுற்றி
சமாளித்து இருந்து கொள்ளும்
பெட்டைத் தேவையையும்
அதுவே பார்த்துக் கொள்ளும்
மிச்சம் மீதிகளை நாசுக்குப் பார்க்காது
தின்று கொள்ளும்
எங்கள் வீட்டில் எதற்கு வளர்கிறது நாய்
நன்றி கெட்ட மனிதர்கள்
நாய்க் குட்டிகளை அண்ட விட மாட்டார்கள்
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...