7 Sept 2018

கொலைப் பொருளாதாரம்

கொலைப் பொருளாதாரம்
கொலையை மலினமாக்கியவர்கள் சொல்கிறார்கள்
காசிருந்தால் கொல்லலாம்
கொல்வதற்கான தில் இருந்தால் கொல்லலாம்
வக்கிரம் இருந்தாலும் கொல்லலாம்
தீவிரவாதியாகிக் கொல்வதோ
தேறாத அரசியல்வாதியாகிக் கொல்வதோ
கூலிப்படைக் கும்பலாகிக் கொல்வதோ
தொழில் முறை சார்ந்தது
நெரிசலில் சாவதும்
வெள்ளத்தில் சாவதும்
விபத்தில் சாவதும்
மேற்கூரை இடிந்து விழுந்து சாவதும்
நிகழ்ந்தால்
கொலைக்கானச் செலவு மிச்சம் என
குதூகலிக்கக் கூடாது
நிவாரணச் செலவில் கணக்கு எழுதப்படும்
கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அல்லது
பெருக்கி வகுத்துப் பார்த்தாலும் அல்லது
வர்க்கமூலம் கனமூலம் கண்டுபிடித்துப் பார்த்தாலும்
கொலை செலவுக்கு ஆனது
கொலைப் பொருளாதாரம்
கோடிகளில் புரள்கிறது என்பதைக்
கற்பனை செய்தாவது நம்பப் பழகுங்கள்!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...