6 Sept 2018

சாதிக்கும் ஆசையை விட்டு விடு


2000 க்கு முன்னாடி உண்மையான காதல் இருந்தது, 2000 க்குப் பின்னாடி பொய்யான காதல் இருந்தது என்கிறார்கள். 2000 க்கு முன்னாடியோ, பின்னாடியோ இருப்பது காதலே இல்லை, நான் 2000 ரூவா நோட்டைச் சொல்றேன்.
*****
அவர் நிறைய பேசுகிறார். குறைவாகச் செயல்படுகிறார். பெரிய மனிதர்கள் என்று சொல்லப்படுபவர்களே அப்படித்தான் என்றாலும் கண்டுபிடியுங்கள், யார் அவர்?
*****
ஊசி போடும் டாக்டர் ஐநூறு ரூபாய் கேட்கிறார். கீரைக்கட்டு விற்கும் ஆயா ஐந்து ரூபாய் கேட்கிறது.
*****
லஞ்சம் கொடுக்காமல் காரியம் சாதிக்க என்ன வழி என்றார். சாதிக்கும் ஆசையை விட்டு விடு என்றேன்.
*****
ஆஸ்பிட்டல்கள் பெரிது பெரிதாக இருக்கின்றன. டாக்டர்கள் கார்களில் வருகிறார்கள். லட்சங்களில் பில் போடுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வியாதிகளை விலை கொடுத்து வாங்குவதற்காக சம்பாதிக்கத் தொடங்கி விட்டார்கள் மனிதர்கள் என்று சொன்னால் கோபப்படுவார்கள் என்பதால் நான் சொல்வதில்லை. மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்து விட்டது என்று சொன்னால் சந்தோஷப்படுவார்கள் என்பதால் அதை மட்டும் சொல்கிறேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...