13 Sept 2018

செல்பிக்குப் பலியான ஒரு நண்பரின் கதை


ஓர் அமைப்பு என்பது ஒரு பயத்தின் பின் விளைவு.
*****
ஆயிரம் பொய்களைச் சொல்லி, அத்தனையையும் நம்ப வைக்கத் தெரிந்தால் நீயும் ஒரு தலைவனே / தலைவியே!
*****
போராடித் துரோகத்திற்குப் பலியான ஒரு நண்பரின் கதையைச் சொன்னேன். பதிலுக்கு செல்பிக்குப் பலியான ஒரு நண்பரின் கதையைச் சொன்னார் கேட்டுக் கொண்டிருந்தவர்.
*****
வாசகங்களை யார் மதிக்கிறார்கள்? புகை பிடிப்பது, மது அருந்துவது தொடர்பான வாசகங்களைப் படித்துக் கொண்டே புகை பிடிக்கிறார்கள், மது அருந்துகிறார்கள். அதற்காக நம்மால் வாசகங்களை உருவாக்காமல் இருக்க முடியாது.
*****
பாசம் என்பது... நாம் இல்லாவிட்டாலும் நம்மை விட நன்றாகக் கவனித்துக் கொள்வார்கள் என்பது தெரிந்த போதிலும், நாம் இருந்துதான் அவர்களைக்  கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான்.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...