13 Sept 2018

கடைசிப் புத்தகங்கள்

கடைசிப் புத்தகங்கள்
படித்தவர்கள் கடைசியாக வாங்கிய
புத்தகங்கள்
கடைசியாக அவர்கள் வாங்கிய
பாடநூல்கள்
*****
ஒளித்தல்
உனக்கானப் பணத்தை
உன் பையில்
ஒளித்து வைத்திருப்பதை
நீ அறிய மாட்டாய்!
*****
கடன்
கடனை வாங்குவதற்கு முன்
உன் மரணம் நிகழ்ந்து விட்டது
மரணத்திற்கு முன்
அதைக் கேட்டு வாங்கும் அளவுக்கு
நம் நட்பு கேவலமானதல்ல
கடனைக் கொடுக்காமலே போகிறோம் என்ற
உறுத்தலின்றி நீ இறந்திருந்தால் போதும் நண்பனே
நான் கண்ணியமன் ஆவேன்!
*****

No comments:

Post a Comment