14 Sept 2018

காவல் பூட்டு

காவல் பூட்டு
சேமித்துக் கொள்ள
காங்கிரீட் தளத்தில் பதித்த
தடங்களில் என்ன இருக்கிறது
பூட்ஸுக்குள் கால்கள் முடங்கும் வாழ்வு
தனிமை நிரம்பிய அறைகளில்
பழுதாகித் தொங்கும் விளக்குகள்
மீன் குழம்பின் வாசனையற்றுப் போன
சமையலறைக்கு அதன் பின் வராது போன பூனையால்
அடுப்பில் பூனை படுத்திருக்கும் என்று
சொல்ல முடியாத வேதனை
செத்தால் நாற்றம் வெளிப் போகும் வரை
உறங்கிக் கிடக்கலாம் உள்ளுக்குள்
பூட்டுகள் காவலுக்குத் தொங்கிக் கொண்டிருக்கும்
*****
நன்றி - ஆனந்த விகடன் - இதழ் 12.09.2018 - பக்கம் 36

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...