4 Sept 2018

திறக்காத ஒரு வீடு, ஒரு மனம் மற்றும் ஒரு உலகம்


திறக்காத ஒரு வீடு, ஒரு மனம் மற்றும் ஒரு உலகம்
கதவைத் திறக்காதே
புகை வரும்
பின் புழுதி வரும்
சாளரத் திறப்பைத் தள்ளிப் போடு
அதன் கம்பிகளால்
தடுத்து நிறுத்த முடியாது நாற்றத்தை
அந்தப் பலனற்ற கம்பிகளால்
அடித்துத் துரத்த முடியாது கொசுக்களை
ஏ.சி.வீட்டுக்குள் எதற்கு ப்ரிட்ஜ்
என்ற கேட்காதே
குளிரிலும் கோபம் வரும்
அது அப்படித்தான்
வசதியெனும் விலங்குகள் பூட்டி
அடைபட்டுக் கிடப்பதே சொகுசு வாழ்க்கை
வியர்க்க விறுவிறுக்க ஊர்சுற்றி
உழைப்பதெல்லாம் அருவருப்பான வாழ்க்கை
வியாதிகள் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்
ஐ.சி.யு. இல்லாத ஆஸ்பிட்டல்களா?
அடைபட்டுக் கிடக்கும் வீட்டுக்குள்
புழங்காமல் கொள்ளாமல் அடைத்து வை
கட்டுக் கட்டாக நோட்டுகளைப் பத்திரமாக!
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...