3 Sept 2018

நீயல்லோ என் அப்பனே!


நீயல்லோ என் அப்பனே!
வெட்டியெறிப்படும் நகத்துக்கு
பாலிஷ் போட்டுக் கொள்வாய்
‍உதிர்ந்து விழும் முடிக்கு
சாயம் பூசிக் கொள்வாய்
எச்சில் படும் உதட்டுக்கு
வண்ணம் தீட்டிக் கொள்வாய்
பசிக்கின்ற வயிற்றுக்கு
கோக்கை ஊற்றிக் கொள்வாய்
பிச்சை என்று கேட்டு வருபவனுக்கு
உபதேசங்களை வீசி எறிவாய்
எதற்கு எது உபயோகம் என்பது
தனக்கு மட்டுமே தெரியுமென
பெரிதாகப் பேசிக் கொள்வாய்
உன் இருப்பின் உபயோகமே
அர்த்தமற்றவைகளின் அர்த்தத்தை
தெளிய வைக்கிறது அப்பனே!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...