1 Sept 2018

லெக் பீஸோடு பிரியாணி


இது என் ஏரியா. நல்லது, உன் ஏரியாவை விட்டு வெளியே வந்து விடாதே.
*****
நிறைய பேச வேண்டும், நிறைய விவாதிக்க வேண்டும். நேரம்தான் இல்லை, உங்களுக்கும் எனக்கும். இவ்வளவு சீரியல்கள் இருந்தால் என்னதான் செய்வது சொல்லுங்கள்.
*****
சாட் செய்யத்தான் தெரியும், அரட்டை அடிக்கத் தெரியாது என்கிறார் நண்ப.
*****
செயற்கை விவசாயக்காரய்ங்க இரசாயனத்தைப் போட்டு கொல்றாய்ங்க. இயற்கை விவசாயக்காரய்ங்க விலையைக் காட்டி கொல்றாய்ங்க. நாமளே நமக்கான விவசாயத்துல இறங்கிக்கணும்லே.
*****
தெல்லாம் அப்போ! இழவு வீட்டில் விருந்து சாப்பாடே போடுகிறார்கள். அதில் ஒன்று, லெக் பீஸோடு பிரியாணி சாப்பிட்ட கதையைத் தனியேத்தான் எழுத வேண்டும். குவார்ட்டரோ, ஆப்போ, புல்லோ தகுதிக்கு ஏற்ப வேறு வழங்குகிறார்கள்.
*****
நாளை விடுமுறை

*****

No comments:

Post a Comment

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? நேற்றைய விவாதத்தை நாம் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழ...