17 Sept 2018

புல்லின் சக்தி

புல்லின் சக்தி
அக்கிரமம் என்று எளிதில்
கடந்து போகாதவர்கள் இருக்கிறார்கள்
பழிவாங்குபவர்கள் இருக்கிறார்கள்
வெட்டிக் கொல்பவர்கள் பெருகிக் கொண்டு இருக்கிறார்கள்
அக்கிரமங்களின் வழி அநியாயத்தை விட மோசம்
எல்லாரும் சொல்வதுதான்
எப்போதும் சொல்லப்படுகிறது
இப்போதும் அதுவே சொல்லப்படுகிறது
அக்கிரமங்கள் அவ்வளவு நல்லதல்ல
இதுவரை புரிந்திருந்தால் பரவாயில்லை
இப்போது புரிந்து இருந்தால் விலகி விடு
ஒரு மலையைக் குத்தித் தூக்கும் சக்தி
புல்லுக்கு உண்டு
*****

No comments:

Post a Comment