15 Sept 2018

அத்தான் வருவார்!


அத்தான் வருவார்!
ரஜினி ரசிகரான அத்தான்
"ஒரு தடவை சொன்னா
நூறு தடவை சொன்ன மாதிரி" என்பவர்
நுறு தடவைக்கு மேல் சொல்லி விட்டார்
ஒரு தடவைச் சொன்னதையே
சன்னல் கம்பிகள் அருகே அமர்ந்து
கண்ணீர்க் கம்பிகள் கோர்த்துக் கொண்டிருக்கும்
அக்கா இனி புரிந்து கொள்ளட்டும்
வருவது போலப் போக்குக் காட்டினாலும்
அத்தான் இனி வர மாட்டார்
அக்கா நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்
ரஜனி ஒரு நாள் அரசியலுக்கு வருவதைப் போல
வராமலா போய் விடுவார் அத்தான்?!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...