1 Sept 2018

மர்மச் சுமைகள்


மர்மச் சுமைகள்
வாழ்வின் தீராத மர்மங்கள்
காலத்தின் காலடிக் கட்டளையை மீறாதவைகள்
இந்த இரவுக்குப் பின்
உயிரோடு இருப்பதும்
உயிர் பிரிவதும்
விடியலுக்குப் பின்னே வெளியாகும்
மர்ம முடிச்சுகளை அவிழ்க்க நினைப்பவர்களை
மர்மத்தோடு கொலை செய்கிறது காலம்
பிறகு என்ன நினைக்குமோ, ஏது நினைக்குமோ
அப்பட்டமாய் அனைத்தையும்
அவிழ்த்துப் போட்டு விட்டு சிரிக்கும்
எளிய உண்மைகளால் ஆனது வாழ்க்கை என்றால்
நீங்கள் கோபப்படக் கூடாது
முடிச்சுகளைப் பின்னியவர்கள் அவரவர்கள் என்பது
மெதுமெதுவாக வெளியாகும்
பாவம்,
எல்லா பழியையும் மர்மமாய்ச் சுமந்து நிற்கும்
ஏதுமறியாதவன் போல் கடந்து கொண்டிருக்கும்
எது பற்றியும் அறிய விரும்பாத காலம்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...