9 Aug 2018

மணம் கொல்பவர்கள்


என்றென்றும் நன்றி என்க!
சாலையில் விழுந்தப் பள்ளம்
தேங்கிய நீர்
குருவிக் குளிக்கும் போது அழகாகிறது
என்பதற்காக
அப்படியே விட்டவர்களுக்கும்
என்றென்றும் நன்றி என்பதாக
விசிறியடித்து ஓவியம் தீட்டாமல்
வாகனத்தில் செல்பவர்களுக்கும்
*****
மணம் கொல்பவர்கள்
உன் பெயரிலான பூ மிக மணக்கிறது
பட்டாம் பூச்சியைக் கொன்று போட்டு
பூவின் தலையைக் காம்போடு கிள்ளி எறிந்து
காதல் மணம் கொண்டால் கொன்றழிப்பேன் என்ற
வாயின் துர்நாற்றத்தையும் மீறி
கிள்ளி எறிந்த கையில்
பூவின் மணம் மிக மணக்கிறது.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...