6 Aug 2018

மருத்துவக் குறிப்புகள்


டம்ப்ளர் பெரிசா இருந்தா காலத்திலேயே ரெண்டு காபி குடிப்பேன். டம்ப்ளர் சிறிசாகி விட்டது. நாலிரண்டு எட்டு காபி குடிக்க வேண்டியிருக்கிறது.
*****
நிறைய மருத்துவக் குறிப்புகள் அனுப்புகிறார்கள். என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. பீஸ் கொடுக்கவும் மனசில்லை.
*****
ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பைத்தியம் இருக்கிறது. மனநோயாளி என்பது மருத்துவச் சொல்.
*****
ஊருக்கு ஒருவர் மேட்ச் ஆகாத டிரெஸைப் போட்டுக் கொண்டு குப்பைப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறார். இந்த ஊருக்கு ஒருவர் டெம்ப்ளேட் ஆகி விட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர்.
*****
பைத்தியம் என்று சொல்லும் பைத்தியங்கள். கொஞ்சம் எச்சரிக்கை தேவைதான் படுகிறது. இருப்பு இருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...