4 Aug 2018

அங்கிள் நீங்க கவிஞராமே!


வாயை மூடுடா! அதை விட ஈஸி, நீ காதை மூடிக்கலாம்!
*****
கர்நாடகக்காரனே பரவாயில்ல. பக்கத்து வயல்காரன் சொட்டு தண்ணி கூட விட மாட்டேங்றான்.
*****
மைய்யமா? மையமா? ஐயம்! அதை விடுங்க. ஐயமா? அய்யமா?
*****
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார முடியவில்லை. கரண்ட் கட்டாகி எட்டு மணி நேரமாகிறது. யாருக்கும் எந்த கவலையுமில்லை.
*****
நிறைய பேச வேண்டும். ஒரு விதைக்காத விதை தீர்வைத் தந்து விடாது.
*****
துப்பாக்கிச் சூடுகளைப் பார்க்கும் போது சீக்கிரமே நாடு சுடுகாடாகி விடும். என்ன தீர்க்கதரிசனமாகப் பேசுகிறார்கள்.
*****
ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள். அவர்களைத்தான் கேட்க வேண்டும். தெரிந்தால் சொல்லுங்கள். நானும் கேட்டுக் கொள்கிறேன்.
*****
ங்கிள் நீங்க கவிஞராமே! அரைக் கிறுக்கரைப் பார்த்துக் கேட்பதைப் போல கேட்கும் சிறுவ நீ கேட்காமலே இருந்திருக்கலாம்!
*****
திருச்சிகாரப் பொண்ணு இந்திய அழகி. அடுத்து உலக அழகியாக வேண்டும். அதற்குடுத்து பிரபஞ்ச அழகியாக வேண்டும். அழகி அழகி அழகியாகிப் போய்க் கொண்டே இருக்க வேண்டும்! கஷ்டம்தான்!
*****
அண்ணே டீ இன்னும் வரல! வரச் சொல்றேன் போ!
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...