4 Aug 2018

நாளை இந்நேரம் எல்லார்க்கும் சுனாமி

நாளை இந்நேரம் எல்லார்க்கும் சுனாமி
மாபெரும் பாதிப்பு
பணிவுடையனாக மாற்றுகிறது
என்ன செய்வது
காலத்தை ஓட்ட வேண்டியதாக இருக்கிறதே
பெற்றோர்களே
பிள்ளைகளின் காதல் மணத்தைச் செய்து வைத்தால்
நன்றாக இருக்கும் என்பதால்
கட்டாயம் செய்ய மாட்டார்கள்
குற்றச்சாட்டு என்பது
காசு பறிப்பதற்கே என்பது புரியாமல்
யோக்கியாம்சத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவார்கள்
ஏதோ ஒரு பயம்
நல்ல திசை நோக்கி திருப்பிக் கொண்டிருக்கிறது
பயத்துக்கு அவ்வபோது கும்பிடு போட வேண்டும்
அவர்கள் பழமையைக் காக்கப் போரிடும் போது
பழமையை அழித்து விட்டு
புதிதாய் எகத்தாளமாய்ச் சிரிக்க வேண்டும்
செத்தால் செத்துட்டானே என்பார்கள்
சாவாது இருந்தால்
இன்னும் சாவு வந்து தொலையவில்லையே என்பார்கள்
கூடுதலாக இப்பப் போய் செத்துத் தொலைத்தானே
வேலை நிறைய கிடக்கே என்பார்கள்
எல்லாம் வெவ்வேறு காட்சிகள் என்று புலம்பாதீர்கள்
கிளைமாக்ஸ் ஒன்றுதான்
நாளை இந்நேரம் எல்லார்க்கும் சுனாமி.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...