3 Aug 2018

ஒம்போது டன் வெயிட்


ப்போல்லாம் ஆர்.பி.செளத்திரி படம்தான் சீரியல் போல. இப்போ பார்த்தாலும் குடும்பத்தோடு உட்கார்ந்து அழ முடிகிறது.
*****
இதயம் முரளியும் சுவலெட்சுமியும் நடித்த தினந்தோறும் படம் பிடிக்கும். அந்த கன்றாவி பிடிச்ச படத்த இன்னும் எத்தனை தடவைதான்ட பார்ப்பேன்னு வாக்கப்பட்டு வந்தவ கரிச்சுக் கொட்டுவது யான் மட்டுமே அறிந்த ரகசியம். அதையெல்லாம் பார்த்தா தினந்தோறும் தினந்தோறும் பார்க்க முடியுமா?
*****
லைப்னா அப்படித்தான் பாஸ் முன்ன பின்ன இருக்கும்ங்றான். ஓங்கி அடிச்சேன்னா ஒம்போது டன் வெயிட்டும் உன் மேல விழுந்திடும். முன்ன பின்ன அட்வைஸ் பண்றதை இன்னயோட நிப்பாட்டிடுன்னேன்.
*****
சத்யராஜ் நடித்த அண்ணா நகர் முதல் தெரு பாருங்கள். அலைபாயுதேல்லாம் காப்பி. அதில் மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுன்னு ஒரு பாட்டு செமையா இருக்கும். அதற்காக வால்டர் வெற்றிவேல் பார்ப்பதில் இறங்கி விடாதீர்கள். சித்தெரும்பு கடிச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.
*****
முதன் முதலா பாட்ஷா படம் பார்த்தப்ப செம பீலிங் பாஸ். இப்போ காலா பார்த்தப்போயும் செம பீலிங் பாஸ். மியூசிக் மிஸ்ஸிங் பாஸ்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...