11 Aug 2018

வாசகர் கஷ்டப்படக் கூடாது


             வாசகர் கஷ்டப்படக் கூடாது என்பதற்காகத்தான் சமயங்களில் எழுதுகிறேன். சமயங்களில் எழுதாமல் இருக்கிறேன். காரணம் வாசகரை எனக்கு அவ்வளவு பிடிக்கும். அவர் கஷ்டம் அவருக்குத்தான் தெரியும்.
*****
            பெரும்பாலான தவறுகள் துணிந்து செய்யப்படுபவைகளாகத் தெரியவில்லை. பயந்து செய்யப்படுபவைகளாகத்தான் தெரிகின்றன.
*****
            நற்பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முயல்பவர்தான் ஆகப்பெரும் எதிரி. எந்த கெட்டப் பழக்கத்தில் இருக்கிறீர்கள் நீங்கள்?
*****
            வெளியேறு தீர்வு கிடைக்கும். உள்ளே இருப்பது கதகதப்பாக இருக்கலாம். மரியாதையாக இருக்காது.
*****
            அவநம்பிக்கையைப் பேசுவது என்பது உம் நம்பிக்கையே உமக்கு ஆபத்து என்பதை உணர்த்துவதற்காகத்தான்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...