11 Aug 2018

யாங்கும் வியாபித்த கண்கள்


யாங்கும் வியாபித்த கண்கள்
உன் இரு கண்களுக்கிடையே
நெளியில் இந்தக் காதலைக்
கொன்று போடு
அல்லது பிழைக்க விடு
கொல்வதுமாய், பிழைக்க வைப்பதுமாய்
நீ புரியும் அழிச்சாட்டியத்தில்
வலியின் வேதனையை
இசைச்சுரமாய் துடிக்கிறது இதயம்
வழியும் குருதியை உள்வாங்கி
ஆசுவாசம் கொள்கிறது கனவு
தப்பிக்கும் சிறு இடைவெளியில்
தியானச் சிரிப்போடு
மீண்டும் அழைக்கின்றன
யாங்கும் நீக்கமற வியாபித்திருக்கும் உன் கண்கள்
உயிர் வாதையை ரசித்து ருசிக்க
மண்டியிட்டு வேண்டி நிற்கிறது உடல்.
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...