12 Aug 2018

நன்றிகள் இருக்கின்றன!


நன்றிகள் இருக்கின்றன!
என்னை நீங்கள் பிரசுரம் செய்ய வேண்டாம்
எப்போது பிரசுரம் ஆக வேண்டும் என எனக்குத் தெரியும்
எப்போது என்னைக் கொண்டாடத் தெரிகிறதோ
உலகம் அப்போது என்னைக்
கொண்டாடி விட்டுப் போகட்டும்
நிகழும் போது நிகழ்வதற்கு
நிகழ்காலத்திற்கு முன்னோ வருங்காலத்திற்கு முன்னோ
நான் மண்டியிட மாட்டேன்
காலத்திடம் பேரம் பேசி
ஆப்பிள்களை வாங்க விரும்பவில்லை என்று சொல்லுங்கள்
அழுகிப் போகும் ஆப்பிள்களுக்காக எழுதியவனாக
நான் இருந்து விடக் கூடாது
ஒரு வேப்பங் கொட்டையின் பரவலுக்கு
உதவியதாக இருந்தால் போதும்
நிர்பந்தப்படுத்தி
உயிர்த்தன்மையை உறிஞ்சாமல் போனால்
உங்களுக்குச் சொல்ல என்னிடம்
நன்றிகள் நிறைய இருக்கின்றன.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...