3 Aug 2018

வானக் கடன்


வானக் கடன்
கடன் கேட்க வந்தவனை
என்ன செய்வதென்று தெரியாமல்
சாடை பேசும் புகைபோக்கியின் வழி
உற்றுப் பார்த்தேன்
புகை போல வெளியேறி விட்டான்
வானத்தில் உலவும்
புகை மண்டலம் ஒவ்வொன்றும்
கடன் கேட்டு அலையும்
மனிதர்களின் எண்ணிக்கை
புகையை எண்ணிச் சொல்பவர்களுக்கு
கடன் தருவதென உறுதியளிக்கிறேன்
வானத்து மேகத்திடம் அளந்தால்
ச்சீ என காறித் துப்பும் என்பதால்
சம்பந்தப்பட்டவர்கள் அதனிடம் மட்டும்
சொல்லாதிருக்க வேண்டுகிறேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...