17 Aug 2018

ரோந்து வாகனங்கள் கடந்து கொண்டிருக்கின்றன...


ரோந்து வாகனங்கள் கடந்து கொண்டிருக்கின்றன...
இரவை மிரட்டும் நடுநிசி நாய்கள்
குரைக்கத் தொடங்குகின்றன
நடு சாலையில் உறங்கிக் கொண்டிருந்த அமைதி
தலைதெறிக்க ஓடுகிறது
கதவடைத்து நிம்மதியாக தூங்க
நடைமேடைவாசிகளால் முடியாது
பயந்தவன் போல்
அருகில் வந்து படுப்பவனை
மிரட்சியோடு பார்க்கிறாள்
நிழற்குடையின் கீழ் நித்திரை கொள்ளும் பேதை
விடியலில் கிடைக்கும் பாதுகாப்பிற்கு
கருத்த உறையிட்டு இருக்கும்
இரவைக் கிழித்தபடி
வெளிச்சம் கக்கிய ரோந்து வாகனங்கள்
கடந்து கொண்டிருக்கின்றன
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...