16 Aug 2018

பஞ்சு மிட்டாய் செத்து விட்டது


பஞ்சு மிட்டாய் செத்து விட்டது
நறுக்கப்பட்ட விரல்களைப்
பொறுக்கி எடுத்துக் கொண்டு ஓடுகிறான்
பிடுங்கப்பட்ட கண்கள்
பைகளில் இருக்கின்றன
கட்டளைகளுக்கு கட்டுப்பட்ட காதுகள்
உடலெங்கும் வியாபித்து இருக்கின்றன
புத்தகங்களை எடுத்து மடியில் வைக்கும் போது
முணுமுணுக்க அவனது வாய்
அவனுக்கு வழங்கப்படுகிறது
அழுகையின் வரைபடங்களை
அவ்வபோது வரைந்து
கனவுகளில் கடிபட்டு கதறுபவனின்
நோட்டுகளில் செத்துப் போய்
விரைத்துக் கிடக்கிறது பஞ்சு மிட்டாய்
அவன் தன்னை மாணவன் என்கிறான்
*****

No comments:

Post a Comment