15 Aug 2018

எளிமையின் கடினம்

எளிமையின் கடினம்
மிக எளிமையாக இருப்பதுதான்
என் சிந்தனை என்றால்
நீ நம்பவா போகிறாய்?
ஆச்சர்யமாகப் பார்ப்பதை நீ
வழக்கமாகக் கொண்டு விட்டாய்
உன் ஆச்சர்யத்தைப் பிடுங்கி எறிய முடியுமானால்
நான் மகிழ்ச்சியடைவேன்
நீ அதற்கம் ஆச்சர்யப்பட்டு அதிர்ச்சியளிப்பாய்
நீ விரும்பினால் நாம்
ஒரு கொலைக்களக் காட்சியையும்
ஒரு நகைச்சுவையையும் பகிர்ந்து கொள்ளலாம்
இரண்டும் ஒன்றுதான்
சற்று குரூரமாய்ப் போன நகைச்சுவை
கொலையில் முடிந்து விட்டதை
நாம் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டு இருக்கிறோம்
இதற்கு மேல் எளிமையாக விளக்கினால்
கடினமாகி விடும்
புரியாதது போல் விலகிப் போய் விடு நண்பனே
நம் ஊடக பிம்பங்கள் அதைத்தான்
நமக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன.
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...