14 Aug 2018

உமக்கு எம் வாய்ப்புகள்


உமக்கு எம் வாய்ப்புகள்
மூக்குக் கண்ணாடியை உடைப்பதாக
உறுதி கொடுத்தால்
கண்களை நோக்கி எறிந்த கல்லை
நடுவானில் நிறுத்தத் தயார்
காதுகளை மழித்துக் கொள்ள வேண்டும்
மூக்கைப் பிடரியில் பொருத்த வேண்டும்
கண்களில் ஒன்றை உச்சந்தலையில் வைத்து
இதயத்தைப் பிடுங்கி
புட்டத்தில் செருகிக் கொண்டால்
தப்பித்துச் செல்ல அனுமதிக்க
சித்தமாய் இருக்கிறோம்
நீ மறுப்பாயானால்
நீயே உன்னைக் கொன்று கொள்
நாங்கள் உன்னைக் கொன்றதாய்
எதிர்காலத்தைப் பழி தூற்ற வைத்து விடாதே!
*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...