13 Aug 2018

ஒரு சிறுகதை ஏன் எழுத முடியாது?


ஒரு சிறுகதை ஏன் எழுத முடியாது?
இனிமேல் சிறுகதைகள் எழுத முடியாது
பக்கங்கள் நீள்கின்றன
வாக்கியங்கள் விரிகின்றன
சொற்கள் பெரிதாகின்றன
முட்டாள்தனங்கள் முடிவில்லாமல் தொடர்கின்றன
பேனாவைக் கொல்ல வேண்டியதாகிறது
தாளில் கிறுக்கித் தள்ளி
கொழுத்த வேண்டியதாக இருக்கிறது
வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதற்காக
யோசிக்கவில்லை என்று சொன்னாலும்
என் சிறுகதைக்கு நானே வாசகனாக
இருக்க முடியாது
சிறுகதைகளில் மூக்கு சிந்துபவர்களை
மிகவும் நேசிக்கிறேன் கனவான்களே!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...