பிரார்த்தனைகள் நிற்பதில்லை!
காங்கிரீட்
தளத்தில் முளைக்க முடியாதென்ற
புல்லைத்
தக்கன
தப்பிப் பிழைக்காத நீ
மாண்டு
போ என்றாயிற்று
கம்பங்களில்
கூடு கட்ட முடியாத குருவிகளை
வாழ்தலுக்குத்
தகுதியில்லாத
பட்டியலில்
சேர்த்து
மனம்
கூசாது ஒழிந்து போ என்றாயிற்று
கும்பிச்
சாக்கடைக் குழியில்
செத்துப்
போன தவளைகளை
பிழைக்கத்
தெரியாத பிண்டங்கள் என
பழி
சுமத்தியாயிற்று
சாயக்
கழிவு ஆற்றின் கரையோரத்தில்
நிறம்
மாறத் தெரியாமல்
மண்டைக்
குழம்பி பைத்தியமாய்
அலைந்த
பச்சோந்தியை
அழைத்து
வந்து
அணுஉலைக்
கழிவு நீரில்
அமுக்கிப்
பொசுக்கியாயிற்று
இன்னும்
என்ன இருக்கிறது என்று புரியாமல்
சின்ன
புல்லுக்கும் கருணை காட்டாத
கடுகத்தனையப்
பேருள்ளத்தோடு
வானத்தளவு
பெருங்கருணைக் காட்ட வேண்டுமென்ற
மரண
பேரம் பேசம் நாவுகளின்
பிரார்த்தனைகளோ
நின்ற பாடில்லை
*****
No comments:
Post a Comment