13 Jul 2018

ஒரு வீட்டில் இரு எதிரிகள் வளர்கிறார்கள்!

ஒரு வீட்டில் இரு எதிரிகள் வளர்கிறார்கள்!
அம்மாவுக்குப் பூனையைப் பிடிக்கும்
அப்பாவுக்குப் பிடிக்காது
அப்பாவுக்கு நாயைப் பிடிக்கும்
அம்மாவுக்குப் பிடிக்காது
ஓரு வீட்டில் இரண்டு திக்கில்
இரண்டு எதிரிகளாக
வளர்ந்து கொண்டிருக்கின்றன
நாயும் பூனையும்
*****
வானில் எரியும் நட்சத்திரம்
பேசிப் பழகி நெகிழ்ந்து
உருகி மருகி
உயிரோடு நடமாடி
இறந்து போய்
சுடுகாட்டில் எரியும்
அன்பின் உயிரைப் பார்த்து விட்டு
அண்ணாந்து நிற்கிறேன்
வானில் எரிகிறது
ஒரு நட்சத்திரம்.
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...