பேரங்களின் அரசியல்
பேரம்
பேசினால் கணிசமாக மிச்சமாகும்
பேரம்
பேசத் தெரியாவிட்டால்
நமக்காகப்
பேரம் பேச
தரகர்கள்
தயாராக இருக்கிறார்கள்
ஆசைக்குக்
கொஞ்சம் பேரம் பேசி
முடியாமல்
போனவைகள் இருக்கின்றன
கீழ்த்தரமாகப்
பேரம் பேசி
படிந்துப்
போனவைகள் இருக்கின்றன
ஒன்றுக்குப்
பாதியாகப் பேசி
நிறைவேறிய
பேரங்களும்
ஒன்றுக்கு
இரண்டாகப் பேசி
நிறைவேறாத
பேரங்களும்
நிலவவேச்
செய்கின்றன
பேரம்
பேசாமல் முடிக்கும் ஒன்றில்
ஏதோ
ஒன்று குறைவதாகத் தோன்றுகிறது
படியாமல்
போனப் பேரத்தில்
பேசாமல்
இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது
பேரங்கள்
பழகி விடுகின்றன
மின்மயானச்
சாம்பலைப் பெறுவது வரைக்கும்
பேரம்
பழகாதவர்களும் இருக்கிறார்கள்
தொடங்குவதற்கு
முன்னே
இரண்டு
காசைக் கூடுதலாக எடுத்து வைத்து
பேரத்தின்
வாயை அடைத்து விடுபவர்கள்
விற்கிறவங்க
சந்தோசப் பட்டத்தான்
வாங்குறவங்க
சந்தோசமா இருக்க முடியும் என்று
நான்கு
பங்கு மனநிறைவை
பேரமின்றிப்
பெற்றுச் சென்று விடுகிறார்கள்
பேசுவதற்கு
நம்மிடம் இருப்பவைகள்
பேரங்கள்
மட்டுமே என்று
பேசிக்
கொண்டே இருப்பவர்களும் இருக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment