11 Jul 2018

கேள்விகளுக்குப் பசிக்காதா?


கேள்விகளுக்குப் பசிக்காதா?
லைகளுக்கு கால் வலிக்காதா?
அலைகளுக்குப் பசிக்காதா?
அலைகளுக்குத் தூக்கம் வராதா?
அம்முக்குட்டியின் கேள்விகள்
அலையலையாய் எழுந்து கொண்டிருக்கின்றன.
அம்முக்குட்டியின் கேள்விகளுக்கு
கால் வலிக்காதா?
அம்முக்குட்டியின் கேள்விகளுக்குப்
பசிக்காதா?
அம்முக்குட்டியின் கேள்விகளுக்கு
தூக்கம் வராதா?
அம்முக்குட்டியிடம் கேட்க வேண்டும்
போலிருக்கிறது.
*****

No comments:

Post a Comment