20 Jul 2018

கொலைவெறித் தத்துவங்கள் எனும் நூல்


இப்படியே படம் எடுத்துத் தள்ளுங்கள். அப்புறம் தமிழர்கள் இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்க்கிறார்கள் என்று குறைபட்டுக் கொள்ளுங்கள். பாவம் தமிழர்கள்!
*****
லங்கோலமாக வருவதைப் பார்த்த போது நீட் தேர்விலிருந்து வருவதைப் போலிருந்தது... (என்னுடைய 'எதுவும் கடந்து போகும்' எனும் நாவலிலிருந்து... பின் குறிப்பு - நாவல் இனிமேல்தான் எழுத வேண்டும்)
*****
"ஹலோ! ரோட்டுக்குப் பக்கத்துல வீடுன்னு சொன்னீங்களே!"
"சாரி சார்! நீங்க‍ கொஞ்சம் லேட். எட்டு வழிச் சாலை போட்டுட்டாங்க!"
*****
பணக்காரருக்கு பசி தெரியாது. ஏழைக்குப் பசியைத் தவிர எதுவும் தெரியாது. (எனது கொலைவெறித் தத்துவங்கள் எனும் நூல் தொகுப்பிலிருந்து...)
*****
எதற்கெடுத்தாலும் கருத்து கேட்கிறார்கள் கருத்து இல்லாமல் வாழ முடியாதவர்கள்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...