20 Jul 2018

ஒரு கவிஞனாக இருப்பதன் கையாளாகாதத்தனம்

ஒரு கவிஞனாக இருப்பதன் கையாளாகாதத்தனம்
இந்த எல்லா கவிஞர்களின் கவிதைகளையும்
இன்றே பருகி விடவா?
மிச்சம் வைத்து நாளொன்றுக்கு ஒன்று என
தொட்டுக் கொள்ளவா?
வாசிக்கப்படாமல் அந்தரத்தில்
தொங்கும் கவிதைகள்
மனதுக்குள் படபடக்கின்றன
இதுதான் அந்தக் கவிதை என
மின்னி மின்னி தோற்றம் கொள்கின்றன
எம் மனதுக்குள் வந்து அக்கவிஞன்
எப்படித்தான் எழுதுகிறானோ?
நானொரு புரிதலுக்கு வருகிறேன்
மனதுக்குள் தட்டுப்படும் அக்கவிதை
அக்கவிஞன் எழுதியதோ?
நான் எழுதியதோ?
ஏன்?
நாங்கள் இருவரும் எழுதியதாக
இருந்து விட்டுப் போகட்டும்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...