22 Jul 2018

ஜியோ சிம்


ஒரு படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதணுமாம். ஏன் பாஸ் இப்படி? படிக்கிற காலத்துல ஹோம்ஒர்க்கே எழுதுனது இல்ல. பெஞ்ச் மேல ஏறி நின்னிருக்கேன்.
*****
நீங்கல்லாம் நல்லா வருவீங்கடா! மனசுப் புகைஞ்சா வார்த்தைகள் இப்படித்தான் வரும்.
*****
மாமியார் மருமகள் சண்டைக்கு இடையில் நான்கு எருதுகளும் ஒரு சிங்கமும் கதை சொல்கிற திரில்லே தனி.
*****
கவிஞர்கள் வெவ்வேறு. கவிதை ஒன்றுதான்.
*****
எட்டு வழிச் சாலை. கிராமங்களுக்கு ஒரு வழிச் சாலையாவது போடுங்கள்.
*****
ஜியோ சிம்மை உடைத்துப் போட்டவன் புரட்சியாளனாக இருக்கக் கூடும்.
*****
ஜிம்முக்குப் போனா உடல் ஸ்லிம் ஆயிடும் என்று நம்பினேன். டிரெய்னர் என்று தொப்பையும் கொப்பையுமாக குண்டாக ஒருவரைக் காட்டுகிறார்கள்.
*****
ஒரு குவார்ட்டரை உள்ள இறக்குனா கவலை போயிடுங்றார்கள். அதுக்கு காசில்லாமத்தான்டா கவலையே.
*****
சாமி கும்பிடுவேன் பாஸ்! மூட நம்பிக்கையெல்லாம் வச்சிக்க மாட்டேன்.
*****
காதல் கவிதைகள் எழுதலாம் என்று இருக்கிறேன். அனுமதி கோரி விண்ணப்பத்திருக்கிறேன். அனுமதி கிடைத்ததும் ஆரம்பித்து விடலாம்.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...