23 Jul 2018

ஹைக்கூக்கள் எழுத...


இப்போதும் என்னைக் காதலிக்கிறாயா
ம்ஹூம் மாட்டேன்
இப்போது நீ கொஞ்சம் குண்டு
*****
தொப்பையைக் குறைத்தால்
ரெண்டாம் காதல் வரலாம்
ஆகவே மாட்டேன் போ
*****
நல்ல கவிதை எங்கே வருகிறது
அன்று அந்த டிஷ்யூ பேப்பரில் எழுதியது
நல்ல காதல் கவிதை
நீதான் மூஞ்சைத் துடைத்துக்
கசக்கி எறிந்து விட்டாயே
*****
ன்பே வா முன்பே வா
மேக்கப்போடு வா
*****
தே கடல்
அதே அலை
அதைத்தான் பார்க்க வேண்டும்
மறுபடியும் மறுபடியும்
பீச்சுக்குப் போய்
என்று அடம் பிடிக்கிறாள் குழந்தே
குழந்தேயோடு மனைவியும்
*****
ஹைக்கூக்கள் எழுதத் தயார். அது ஜப்பானிய வடிவம் என்கிறார்கள். ஜப்பானிய அரசாங்கம் அனுமதித்தால் செய்து பார்த்து விடுவேன். எப்படி அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் தெரிவியுங்கள்.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...