14 Jul 2018

துடித்து அடங்கும் வாழ்வு

துடித்து அடங்கும் வாழ்வு
செய்திச் சேனலைப் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பா
செய்தித்தாள் பார்த்துக் கொண்டிருக்கும் தாத்தா
பேஸ்புக் பார்த்துக் கொண்டிருக்கும் மகன்
வாட்ஸ் அப்பில் உலாவிக் கொண்டிருக்கும் பேரன்
கதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டி
சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா
சமையல் குறிப்பில் மூழ்கியிருக்கும் அக்கா
யூ டியூப்பில் தேடிக் கொண்டிருக்கும் அண்ணன்
மோபைல் கேமில் இருக்கும் பாப்பா
வடிவங்கள் மாறலாம்
செய்திகளைப் பெறுதலும் புரிதலும்
அதற்கானத் துடிப்புகளும்
துடித்து அடங்குவதுமே வாழ்வு!
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...