24 Jul 2018

பறவைகள் தின்றழித்த கனிகள்


பறவைகள் தின்றழித்த கனிகள்
கூட்டுக்கு ஒரு மரம் என்ற
கணக்கு வழக்கில்லாமல்
பறவைகள் விதைத்த மரங்கள்
காடு
கனியைத் தின்றழித்து
விதைகளை ஒழுக விட்டு
மரம் செய்த பறவைகளிடம்
பெருமையாக சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்
நகருக்கொரு காடழித்து
வீட்டுக்கொரு மரம் வளர்ப்பதாய்
பறவைகள் கொத்தத் தொடங்கினால்
எச்சம் வழி விழுந்து முளைக்க
மனிதன் மரங்கள் அல்ல
மனிதன் மரத்துப் போன மரம்
*****

No comments:

Post a Comment

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா?

சாமியாடுவதன் பின்னணி என்ன? அருள்வாக்கு பலிக்குமா? சாமியாடுவதன் பின்னணி என்ன? அப்போது சொல்லப்படும் அருள்வாக்கு பலிக்குமா? இனிய நண்பர் க...